Aran Sei

மகாத்மா காந்தி நினைவுநாள்: ‘கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை’- மு.க.ஸ்டாலின்

கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவுநாளான இன்று(ஜனவரி 30), மகாத்மா காந்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுடன் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். முதலமைச்சருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்