Aran Sei

மோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்

டந்த வாரம் இரு மாநில எல்லையில் நடந்த வன்முறையால், எல்லை பகுதியில் சிக்கி நிற்கும் லாரிகளை உள்ளே அனுமதிக்குமாறு அசாம் மாநில அதிகாரிகளுக்கு மிசோராம் அரசு கடிதம் எழுதியுள்ளது.  தனது எல்லைக்குள் நுழையும் வாகனங்களின் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அக்கடிதத்தில் உறுதியளித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ள மிசோராம் அரசு, கொரோனா மருந்துகள், தொற்று சோதனை கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை மிசோரமிற்கு வழங்க அசாம் அரசு அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இரு மாநில எல்லையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அண்டை மாநிலமான மிசோராமிற்குள் நுழைய வேண்டாம் என அசாம் அரசு அம்மாநில மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. மிசோரம் மாநிலமானது அண்டை மாநிலங்களிலிருந்து, குறிப்பாக அசாமில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகிறது. தற்போதைய பதற்றமான சூழலால், வான்வழியாக அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லப்படுகிறது.

அசாம் – மிசோராம் எல்லை கலவரம் – அசாம் முதலமைச்சர் மீது மிசோரம் காவல் துறை வழக்குப் பதிவு

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 2), அசாம் மாநில அரசுக்கு மிசோரம் உள்துறை செயலாளர் வனலங்காய்சாகா எழுதிய கடிதத்தில், “26.07.2021 முதல் லைலாபூர் தேசிய நெடுஞ்சாலை 306-ல் சிக்கித் தவிக்கும் மிசோரம் செல்லும் வாகனங்களை மிசோரமிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். தாமதமின்றி இம்முடிவை எடுக்க வேண்டும். அதனால், தயவுசெய்து உடனடியாக அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்.” என்று கோரியுள்ளார்.

மேலும், மிசோரமிற்குள் நுழையும் அனைத்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் அவர்களின் வாகனங்களின் பாதுகாப்பிற்கு மிசோரம் அரசு உத்தரவாதத்தை அளிக்கிறது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லையில், இருமாநில காவல்துறையினருக்கு இடையில் நடந்த மோதலில், 5 அசாம் காவல்துறையினர் உயிரிழந்தனர். 42 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்