Aran Sei

‘மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்து அலுவல் மொழியாக்குங்கள்’ – மிசோரம் தேவாலய தலைவர்கள் கோரிக்கை

மிசோரம் மாநிலத்தின் மிகப்பெரிய கிறித்துவ பிரிவான மிசோரம் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் தலைவர்கள், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மிசோ மொழியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, தேவாலயத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மிசோ மொழியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்காவை வலியுறுத்தியுள்ளனர்.

மாநிலங்களவையில் அதிகரித்து வரும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு – இந்தி எதிர்ப்புதான் காரணமா?

இதற்குப் பதிலளித்துள்ள சோரம்தங்கா, தனது தரப்பிலிருந்து இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தோரயமாக 325 கி.மீ நீளம் தனது எல்லையை மிசோரம் மாநிலமானது அசாம், மணிப்பூர் மற்றும் திரிபுராவுடன் பகிர்ந்து கொள்கிறது. இதில், குறிப்பாக அசாமுடன் நீண்டகாலமாக எல்லை தகராறு உள்ளது.

’செத்துப்போன மொழிக்குச் செய்தி அறிக்கை எதற்கு?’ – வைகோ

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், கொங்கணி, அசாமி, இந்தி உள்ளிட்ட 22 மொழிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன, இந்த மொழிகளை அலுவல் ரீதியிலான தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியும்.

மிசோ மொழியானது வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம், அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பேசப்படும் பழங்குடியினர் மொழியாகும்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்