Aran Sei

அசாம் – மிசோராம் எல்லை கலவரம் – அசாம் முதலமைச்சர் மீது மிசோரம் காவல் துறை வழக்குப் பதிவு

சாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா  சர்மா மீது மிசோரம் காவல் துறை  வழக்கு பதிந்துள்ளது.

கடந்த ஜூலை 26 அன்று நடந்த அசாம்-மிசோரம் இருமாநில  எல்லைத் தொடர்பாக  ஏற்பட்டக்  கலவரத்திற்கு காரணம் என்று இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சார்ந்த  6 மூத்த அதிகாரிகள்மீதும் , 2௦௦ அடையாளம் காணப்படாத  காவல்துறை அதிகாரிகள்மீதும் மிசோரம் காவல் துறை  வழக்குப் பதிந்துள்ளது.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

காவல் ஆணையர் அனுராக் அகர்வால், துணை காவல் ஆணையர் தேவோஜோதி முகர்ஜி, கச்சார் பகுதி  மாவட்ட நீதிபதி  கீர்த்தி ஜல்லி, கச்சார் பகுதி காவல் கண்காணிப்பாளர் வைபவ் சந்திரகாந்த் நிம்பால்கர்,  வன அலுவலர் சன்னிடியோ சவுத்ரி மற்றும் தோலாய் பகுதி  காவல்  நிலைய பொறுப்பாளர் சஹாப் உதின் ஆகிய அதிகாரிகளின் மீது  மிசோரம் காவல் துறை  வழக்கு பதிந்துள்ளது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இதுதொடர்பாக அசாம் மாநில தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “கோலசிப் மாவட்ட  துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) முன் ஆகஸ்ட் 1 அன்று ஆஜராக வேண்டும்.  துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி ஆவார்” என்றும் கூறப்பட்டுள்ளது.

source; the new Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்