Aran Sei

‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல்

மிசோரம் மாநில புதிய தலைமைச் செயலாளராக ரேணு ஷர்மாவை ஒன்றிய அரசு நியமித்த நிலையில், மிசோ மொழி தெரிந்த ஒருவரை மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மாதத்துக்கு முன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜோரம்தங்கா கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது டெல்லியில் இருக்கும் ஜோரம்தங்கா, பிரதமர் மோடியை சந்தித்து, தலைமைச் செயலாளர் நியமனம் மற்றும் மியான்மர் அகதிகளுக்கான மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல் புகார்கள் – கல்லூரி பேராசிரியர் கைது

சிறந்த நிர்வாகத்திற்காக மிசோ மொழி தெரிந்து பணியாற்றக் கூடிய தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற தனது அரசின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அச்சந்திப்பின் போது, பிரதமரிடம் முதலமைச்சர் ஜோரம்தங்கா கேட்டுக் கொண்டதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரேணு ஷர்மாவை தலைமைச் செயலாளராக நியமித்த ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி ஜோரம்தங்கா அக்டோபர் 29 அன்று அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

அக்கடிதத்தில், மிசோராம் அமைச்சர்கள் எவருக்கும் இந்தி புரியவில்லை என்றும் சிலருக்கு ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் கூட சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்