Aran Sei

மிசோரத்தை சார்ந்த ஆட்சிப்பணியாளர்களையே கல்வித்துறையில் நியமிக்க வேண்டும்- மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

மிசோரம் மாநில உயர்கல்வி துறையில் அம்மாநிலத்தை சேர்ந்த ஆட்சிப்பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் என மிசோரம்  மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மிசோரம் மாநிலத்தைச் சாராத ஆட்சிப்பணியாளர்கள் அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழிற்நுட்பக்கல்வி துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மிசோரம் மாநில தலைநகர் அஷ்வாலிலுள்ள உயர் தொழிற்நுட்பக்கல்வி துறை இயக்குனரகத்தின் முன்பு மிசோரம் மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மிசோரம் மாணவர் கூட்டமைப்பினர், தொழிற்நுட்பக்கல்வி துறையின் இயக்குனர் நசுகுமாரை வேறொரு துறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து பேசிய, மிசோரம் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சாமுவேல் சொரந்தன்புவா, “இயக்குனர் நசுகுமார் நடத்திய உயர்கல்வி தேர்வுகளில் குளறுபடி நடந்ததாலே இந்தக் குழப்பம் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு அதிகரித்து வருகிறது – இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

மேலும், மிசோரத்தை சார்ந்த ஆட்சிப்பணியாளர்களை நியமிப்பதன் மூலம் இந்த வகுப்புவாத பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்றும் சாமுவேல் சொரந்தன்புவா கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போராட்டங்களுக்கான காரணம் குறித்து பதிலளித்த சாமுவேல், “எப்போதெல்லாம் மிசோரத்தை சாராத ஆட்சிப்பணியாளர்கள் கல்வித்துறையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம்”. என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

மேலும், அது அந்த அதிகாரிகளின் மீதான வெறுப்பல்ல என்றும், மிசோரம் சாராத அதிகாரிகளுக்கு மிசோரத்தின் பூர்வ குடிகளுக்கு என்ன தேவை என்பது புரியவில்லை என்றும் சாமுவேல் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

2015 ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில், சக்மா மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்நுட்ப படிப்புகளில் பிரிவு-1 ன் படி 38 இடங்கள் ஒதுக்கப்பட்ட போது பெரும் கலவரம் வெடித்தது.

பூர்வீக மிசோரம் வாசிகள் சக்மா இனமக்களை மிசோரத்தின் பூர்வீக குடிகள் அல்லர் என மாணவர் கூட்டமைப்பு கருதுகிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மிசோரம் பூர்வகுடி மக்களுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்நுட்ப படிப்புகளுக்கு பிரிவு-2 மற்றும் பிரிவு-3 கீழ் மட்டுமே இடம் ஒதுக்கப்படுகிறது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்   செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்