மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் இடது சாரிகள் கூட்டணியில் ஒரு கட்சியாக இந்திய மதசார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) போட்டியிடுகிறது. ஏற்கனவே இடது சாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் தொகுதி பங்கீடு முடிந்திருக்கும் நிலையில், புதிதாக சேர்ந்த ஐ.எஸ்.எஃப் கட்சிக்கு, தஙகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து இடது சாரிகள் 30 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும் ஒதுக்க உறுதியளித்துள்ளனர்.
ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி
இந்நிலையில், ஐ.எஸ்.எஃப் சார்பில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஃப் ஒரு மதவாத அமைப்பு என பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலில் உயர்சாதி இந்துக்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினர் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறன.
கேரள தலித் சிறுமிகள் கொலை: பினராயி விஜயனுக்கு எதிராக தேர்தலில் களமிரங்கும் சிறுமிகளின் தாய்
இது தொடர்பாக, ஐ.எஸ்.எஃப்யின் மூத்த தலைவர், ”நாங்கள் வகுப்புவாதிகள் இல்லை என்பதை எங்கள் வேட்பாளர் பட்டியல்மூலம் நிருபித்துள்ளோம். நாங்கள் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானவர்கள். அதை எங்கள் வேட்பாளர் பட்டியல் பிரதிபலிக்கிறது. நாங்கள் தொடர்ந்து அதைப் பேணுவோம்”.
”ஐ.எஸ்.எஃப் ஒரு மதசார்பற்ற கட்சி, அவர்கள் சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் பேராடுகிறார்கள்”என பெயர் குறிப்பிட மறுத்துவிட்ட ஒரு இடது சாரி கட்சி தலைவர் கூறியுள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.