Aran Sei

அலிபாபா நிறுவனரைக் காணவில்லை – சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ளாரா?

சீன தொழிலதிபர் ஜாக் மா மாயமாகியுள்ளார். இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் போல முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா வின் நிறுவன தலைவரான இவர், சீன கட்டுப்பாட்டு அமைப்புகளை பொது அரங்கில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர் விளைவாக அவரது நிறுவனம் மீதான நெருக்குதலை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புத்தாக்கத்தை சீன அரசும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒருபோதும் ஏற்கவில்லை எனக்கடுமையாக குற்றம் சாட்டிய அவர். நிதி அமைப்புகளை முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் நிதி சேவையில் தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தாக டைம் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்

இன்டர்நெட் வர்த்தகத்தில் தனியொரு நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கில் சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி அலிபாபா குழும நிறுவனங்களுள் ஒன்றான ஏஎன்டி நிறுவனம் மீதான நம்பகத்தன்மை இழந்துவிட்டதாக குற்றம் சாட்டி விசாரணை நடத்தியது. அத்துடன் அந்நிறுவனத்தின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டது,
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக அவர்பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை என்று பினான்சியல் நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தார் எல்லை தடைகளை நீக்கியது சவுதி அரேபியா – இன்று வளைகுடா உச்சிமாநாட்டில் கத்தார் பங்கேற்பு

ஆப்பிரிக்காவின் வர்த்தக தலைவர்கள் என்ற அவரது சொந்த நிகழ்ச்சியின் இறுதி பாகத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கடந்த நவம்பரில் ஏஎன்டி குழுமம் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு சீன அரசு அனுமதி அளிக்கவில்லை. அத்துடன் அவர் சீனாவை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. ஜாக் மாவுக்கு கடந்த மூன்று மாதத்தில் 11 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிஸ்னஸ் இன்சைடர் இந்தியா தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்