கொரோனா வைரஸை சீன நாடு பரப்பியதாக போலியான செய்தி இணையத்தில் பரவிவருகிறது.
அந்த போலியான செய்தியில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
‘இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா’ : என்ன செய்யப் போகிறது ஒன்றிய அரசு என ராமதாஸ் கேள்வி
மேலும், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால், டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆங்கஸ் டாலகிலேஷ்(Angus Dalgleish) செயிண்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் துறை பேராசிரியர், இம்முனோர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சொரன்செனுடன் இணைந்து எழுதிய அறிவியல் ஆய்வேட்டின் வெளியிடப்படாத ஆய்வறிக்கை ஒன்றினை வைத்து செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியக் கடற்பகுதிக்கு அருகில் சீனா தன் ராணுவத்தை நிறுத்துவது தமிழகத்திற்கு ஆபத்து – வைகோ எச்சரிக்கை
மேலும், அந்த அறிவியல் ஆய்வேட்டை வெளியிட்டுள்ள அதன் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் படத்திலேயே வெளியிடும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது (Embargoed until Publication) என அச்சிடப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.
இந்நிலையில், வெளியிப்படாத ஆய்வறிக்கையை வைத்து உறுதிப்படுத்தாத டெய்லி மெயில் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஆதாரமாக வைத்தும், வெளியிடப்படாத அந்த அறிக்கையை வைத்தும் சீனா தான் வைரஸை பரப்பியது என்று போலியான செய்தி பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
source: FACT Findings
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.