Aran Sei

குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை – அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Image Credits: New Indian Express

குழந்தைகள் நலக்குழு உறுப்பினரே காப்பகத்துக்கு வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் தவறாக நடந்துகொளவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறையையும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரத்தையும் பதிலளிக்க கோரி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட அரசின் சிறப்பு முகாமில் உள்ள குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான குளோரி ஆனி, முன்னாள் தலைவர் மணிகண்டன் மற்றும் முன்னாள் உறுப்பினர் முகமது சகாருதீன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளால் பெண்குழந்தைகள் படிப்பை இழக்கும் அபாயம்

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

”இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

“இது குறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் கறுப்பின மக்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்கள் – காலோன்டா முலாம்பா

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சமூக நலத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்