Aran Sei

காஷ்மீரில் உமர் பரூக்கை விடுவித்த மாவட்ட நிர்வாகம்: தொழுகையை வழிநடத்த அனுமதி மறுத்த காவல்துறை

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹூரியத் அமைப்பின் தலைவரும், காஷ்மீர் இஸ்லாமியர்களின் முதன்மை மதகுருவுமான மிர்வயிஸ் உமர் பரூக்கிற்கு, ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தலைமை தாங்க காவல்துறையினரால்அனுமதி வழங்கப்படவில்லை என ஹூரியத் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உமர் பரூக் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்று ஜம்மூ & காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்த சில தினங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய ஹூரியத் அமைப்பின் செய்தி தொடர்பாளர், ”மிர்வயிஸ் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருக்கிறார்” என்றும், ”அவர் வெள்ளிக்கிழமை ஜாமியா பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடந்த அனுமதியில்லை” என்றும்  தெரிவிக்க காவல்துறை அதிகாரிகள் வியாழன்கிழமை (மார்ச் 4) ஆம் தேதி மாலை  மிர்வாய்ஸின் இல்லத்திற்கு வந்தனர் எனத் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – பின்வாங்கிய மத்திய அரசு

வெள்ளிக்கிழமை காலை மிர்வாய்ஸின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதி காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்திருப்பதாக, தி இந்து  தெரிவித்துள்ளது.

”20 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்த மிர்வயிஸ் அண்மையில் விடுவிப்பதாக அறிவித்தபின்னர் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு ஹூரியத் அமைப்புக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், மிர்வயிஸ் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையை அவர்களே பின்பற்றவில்லை” எனச் செய்தி தொடர்பாளர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஜம்மூ – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 4, 2019 ஆம் தேதியில் இருந்து மிர்வயிஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மிர்வயிஸ் விடுக்கப்பட்டதாக வந்த அறிவிப்பை அடுத்து, மதத்தலைவர்களை சந்திக்கவும், ஜாமியா பள்ளிவாசலில் பிரசங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருத்தார் என ஹூரியத் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்