Aran Sei

பாலியல் வன்கொடுமை குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் – சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுப்பு

ரசு வேலை வாங்கி தருவதாகப் பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரால் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதிக்கப்பட்ட பெண் நீதிபதிக்கு கடிதம்

அரசுவேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் தொடர்பான காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகி இருந்தார்.

இந்தச் சம்பவம்குறித்து விசாரிக்க அரசின் சிறப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

’பாஜக அமைச்சருக்கு எதிராகப் புகார் அளிக்க உள்ளேன்’ – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

சிறப்பு புலனாய்வு குழு அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அந்தப் பெண் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், அமைச்சர் பாலியல்வன்கொடுமை ஈடுபட்டது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

இந்நிலையில் இந்த வழக்கில் ஜார்கிஹோலியை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தாகவும், ஆனால் உடல்நிலை காரணமாகக் கூறி அமைச்சர் ஆஜராக வில்லை என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் வெளியான காணொளி போலியாகப் புனையப்பட்டது, தான் குற்றமற்றவன் என ரமேஷ் ஜார்கிஹோலி கூறி வந்தாலும் , பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அமைச்சருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்