Aran Sei

பாடத்திட்டத்தில் திமுகவை அவதூறாக எழுதியதாக பல்கலைக்கழகத்தின் மீது புகார் – நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி உத்தரவு

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின்  சமூக அறிவியல் துறையின் முதுகலை முதலாமாண்டு  பாடத்தில், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கம்குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளது என்றும், அதைனை உரிய துறை வல்லுனர் குழு அமைத்து மாற்றப் படுமென்று  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும்,  கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அமைச்சர் பொன்முடி, திறந்தவெளி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் தவறுகள் இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவி – அனுமதியளித்த இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்

குறிப்பாக,  திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து முதுகலை முதலாமாண்டு  சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அவதூறான கருத்து இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில், ”இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான திமுக, பொதுவுடமைக் கட்சிகள் அவர்களை (சிறுபான்மையினர்) வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அவை அவர்களைத் தேசியப் பாதையில் கலந்து விடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி வன்முறை வெடிக்கும்போது அதனைக் கண்டிக்காமல் இருக்கின்றனர்” என்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி பாடப்புத்தகத்தைப் படித்துக் காட்டினார்.

கொரோனாவில் மீண்டவர்களுக்கு அதிகரித்து வரும் மைகோர்மைகோசிஸ் நோய் – தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

பாடப்புத்தகங்களில் உள்ள தவறான கருத்துக்களை நீக்கி, புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள அவர், தவறான கருத்துகளைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்