Aran Sei

தீபாவளிக்கு முன் 25,000 டன் வெங்காயம் இறக்குமதி : அமைச்சர் பியூஷ் கோயல்

credits : the newindian express

இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பின் (என்ஏஃப்டி) மூலம் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் காணொலி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தனியார் வர்த்தகர்களின் மூலம் வெங்காய இறக்குமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் ஏற்கெனவே 7 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதி செய்யப்பட்டுச் சந்தைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீபாவளிப் பண்டிகைக்கு முன் 25 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

புதிதாகத் திருத்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.66 வரை அதிகரித்துள்ளது. ஆனால் இதை மறுதலித்த அமைச்சர் வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மூன்று நாட்களில் விலைகள் பெரும்பாலும் நிலையானதாகவே (ரூ.65) உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இறக்குமதியைத் தவிர, அடுத்த மாதம் பருவ காலம் முடிந்து வரும் வெங்காயங்களின் வருகை விலையேற்றத்தைக் குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எகிப்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து தனியார் வர்த்தகர்களின் மூலம் சந்தை விலையில் வெங்காயம் வாங்கிவிடலாம் எனக் கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரும் ஊரடங்கு காலத்தில் வெங்காயங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளைச் சற்றுத் தளர்த்தி விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைத்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வெங்காயம் மற்றும் வெங்காயம் விதைகளை ஏற்றுமதி செய்யத் தடை அரசாங்கம் விதித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் உருளைக்கிழங்குகளின் விலையும் கிலோவிற்கு 42 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பூட்டானில் இருந்து  30,000 ம் டன் வரை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் இந்த இறக்குமதிகளின் காரணமாக ஜனவரி மாதத்தின் இறுதி வரை சேவை வரிகள் 30  சதவீதத்திலிருந்து 10% வரை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு அவர் கவனித்து வந்த துறைகளைத்  தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்தத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பான இது காணொலி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது. இதில் பேசிய அவர் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருப்பதால் அரிசியைக் கொள்முதல் செய்வது கடந்த ஆண்டை விட 18% உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசாங்கம் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது விவசாயிகளைப் பாதிக்காது எனக் கூறியவர். இதற்கெதிராக நடைபெறும் போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களின் பெயரால் நடைபெறுகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தி இந்து இணையத்தளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்