Aran Sei

ஈழப் போராளிகளையும் தமிழர் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் ‘தி பேம்லி மேன் 2’ தொடரை தடை செய்யவேண்டும் –   பிரகாஷ் ஜவுடேகருக்கு தமிழக அமைச்சர் கடிதம்

ழ போராளிகளையும், தமிழர் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்படுள்ள தி பேம்லி மேன் 2  இந்தி தொடர் ஒளிபரப்புவதை உடனடியாக தடை செய்யவேண்டும் என மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவுடேகருக்கு தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ”’தி பேமிலி மேன் 2′ இந்தி தொடரில் கண்டிக்கத் தக்க வகையில், ஈழத்தமிழர்களைத் தவறாக  சித்தரித்திருப்பதாகவும், தற்போது வெளியாகியிருந்த அதன் முன்னோட்டத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கும் வகையிலும், உருக்குலைக்கும் விதமாகவும் கூறப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்

மேலும், இந்த தொடர் திட்டமிட்டே ஈழத்தமிழர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தைச் சிதைக்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் விதமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது,”ஈழத் தமிழர்களின் உணர்வுகளோடு தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால் மாநிலத்தின் நல்லிணக்கத்தை பேணுவது கடினம்” என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்

எனவே ‘தி பேம்லி மேன் 2 ‘இந்தி தொடர் ஓடீடீ, அமேசான் பிரைம் போன்றத் தளங்களில் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடுமுழுவதும் ஒளிபரப்பப்படுவதை தடைவிதிக்க வேண்டுமென தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகருக்கு எழுதியுள்ளக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்