ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து மதராஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்படலாம் என்று அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மதராஸாக்களிலும் தேசியக் கீதம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், ஹரியானா அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அரசாங்கத்தின் நடவடிக்கைபோல ஹரியானாவிலும் நடைமுறைப் படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”இதில் தவறேதும் இல்லை. பள்ளிக்கூடமோ மதராஸாவாக இருந்தாலும் சரி, பள்ளியாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை உத்தரபிரதேசத்தில் முதல் அனைத்து மதராஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்களுக்கும் உத்தரபிரதேச மதராஸா கல்வி வாரிய பதிவாளர் பிறப்பித்துள்ளார்.
Source: NDTV
சீமான் போல சிந்தித்த ராஜபக்சே திவாலான இலங்கை | Nathan Interview | Srilanka Crisis | Seeman | NTK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.