Aran Sei

‘பிரச்சினைக்குரிய பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை’ – பிஎஸ்பிபி விவகாரம் குறித்து அன்பில் மகேஷ் கருத்து

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 26), அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “சென்னையில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், ஒரு குழுவை அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

‘பார்ப்பனிய கட்டமைப்பும் ஆணாதிக்க சிந்தனையும் கொண்டதுதான் பிஎஸ்பிபி பள்ளி’ – டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்

“மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து காவல்துறையால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவை மட்டுமின்றி, பிரச்சினைக்குரிய அந்த சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்