Aran Sei

‘மோடி ஜி ஜிந்தாபாத்’: அரசியலுக்காக விமானப் படையை தவறாகப் பயன்படுத்து ஒன்றிய அரசு – சமூகச் செயற்பாட்டாளர்கள் கண்டனம்

க்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி செய்து வரும் முயற்சிகள் குறித்து, இந்திய விமானப்படை விமானத்திற்குள், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரையை காட்டும் காணொளி சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் கனரக சரக்கு விமானம் தரை இறங்கியது. அதைத் தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் அவ்விமானத்தில் ஏறியுள்ளார்.

உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ

விமானப் பணியாளர்கள் அணிவது போன்ற நீல நிற ஜாக்கெட் மற்றும் தொப்பியில் இருந்த அஜய் பட், அங்கிருக்கும் மாணவர்களிடம், “கவலைப்பட வேண்டாம். மோடி ஜியின் அருளால் உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது. எல்லாம் சரியாகிவிடும். பாரத் மாதா கி ஜெய்.. மதிப்பிற்குரிய மோடிஜி ஜிந்தாபாத்” என்று முழங்குகிறார்.

பின்னர், அவர் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டபடி கைகளை உயர்த்தி, தன்னைத் தொடர்ந்து முழக்கமிடுமாறு மாணவர்களிடம் சைகை காட்டுகிறார் .

மதிப்பிற்குரிய மோடி ஜி ஜிந்தாபாத்” என ஒன்றிய அமைச்சர் முதலில் முழங்கும்போது, ​​மாணவர்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றாமல் இருந்தனர்.

உக்ரைன் போரால் ஒரு வாரத்தில் அகதிகளான 10 லட்சம் மக்கள் – ஐ.நா., தகவல்

மீண்டும், “மதிப்பிற்குரிய மோடி ஜி ஜிந்தாபாத்” என்று முழங்குகிறார். அப்போதுதான் சில மாணவர்கள் “ஜிந்தாபாத்” என்று மட்டும் முழங்குகிறார்கள்.

இக்காணொளி சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக இந்திய விமானப் படையை தவறான முறையில் ஒன்றிய இணையமைச்சர் பயன்படுத்தியதாக சமூக வலைதங்களில் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்