Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் – சட்ட வரைவை திருத்த விவசாயிகள் கோரிக்கை

வேளாண் உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை உறுதி செய்வதற்காக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அனுப்பிய வரைவு முன்மொழிவுகளின் தொகுப்பில் விளக்கங்கள் மற்றும் திருத்தங்களைக் கோரியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நெறிமுறையின் சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்கான கோரிக்கையை ஆராய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வல்லுநர்கள் மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று வரைவு கூறுகிறது, ஆனால், எஸ்.கே.எம். அதில் மற்ற விவசாய சங்கங்கள் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளது.

நாகலாந்து துப்பாக்கிச் சூடு – மேஜர் ஜெனரல் அதிகாரத்தில் உள்ளவர் விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளும் போராட்டம் முடிவுக்கு வந்ததும் திரும்பப் பெறப்படும் என்று வரைவு கூறுகிறது.

இது குறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறும்போது,”நாங்கள் அதை ஏற்க மாட்டோம். காலக்கெடுவுக்குள் வழக்குகளை திரும்பப் பெறும் நடைமுறையை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். பஞ்சாப் அரசு வழக்குகளை கைவிடுவதற்கான முடிவை ஏற்கனவே அறிவித்துள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கொள்கை அடிப்படையில் வரைவு ஒப்புக் கொண்டுள்ளது.

மசூதியை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும் – ஒன்றிய இணை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா

இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 700 என்று தெரிவித்த விவசாய சங்க கூட்டமைப்பு. ஒன்றிய அரசு பஞ்சாப் வழிமுறையைப் பின்பற்றலாம் என்றும் `5 லட்சம் இழப்பீடு மற்றும் உறவினருக்கு அரசு வேலை வேண்டும் என்று என்று மற்றொரு மூத்த சம்யுக்த் கிசான் மோட்சா தலைவர் அசோக் தவாலே கூறியுள்ளார்.

Source: newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்