Aran Sei

தடுப்பூசிகள் எங்கே? இடைவெளியைக் கவனத்தில் கொள்ளுங்கள் – ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

ஜூலை மாதம் அளிப்பதாக கூறிய தடுப்பூசிகள் எங்கே? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் 34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக ஒன்றிய அரசை விமர்சித்திருந்த ராகுல்  காந்தி, “ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசிகள் எங்கே?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தன், “ஜுலை மாதத்திற்கான தடுப்பூசிகள்குறித்து நான் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டிருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை?. அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா?. ஆணவத்திற்கும் அறியாமைக்கும் தடுப்பூ மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தடுப்பூசி டிராக்கர் என்ற வரைப்படத்தை பதிவிட்டுள்ளர்.

மேலும், ”கொரோனா 3வது அலையைத் தவிர்க்க நாளொன்றுக்கு 69 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் நாளொன்றுக்கு 50.8 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகின்றன. இந்த இரண்டுக்குமான வேறுபாடு 27 விழுக்காடாக உள்ளது. இந்த இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்