Aran Sei

ஊரடங்கால் வாழ்விழந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள் : மிரட்டி பணம் பறிப்பதாக மகாராஷ்ட்ரா காவலர்கள் மீது புகார்

காராஷ்டிராவில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 13) அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அம்மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும்  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களிடம் மகாராஷ்டிரா காவல்துறையினர் மிரட்டி பணம் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளரான டாக்ஸி ஓட்டுனர் கூறும்போது,  “கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இங்கே எங்களின் வாழ்வாராம் பெரும் கேள்விக்குறிய ஆகியுள்ளது. அதனால், நாங்கள் எங்கள் கிராமங்களுக்கே திரும்பிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும் நான் இப்படிதான் சொந்த கிராமத்திற்கு திரும்பினேன். நிலைமை சரியானதும் இங்கே திரும்பினேன். அதேபோல், இந்த முறையும் கடந்த ஆண்டைப் போலவே காவல்துறையினரும் எங்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

புனேவில் இருந்து தன் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் சனாவுல்லா கூறும்போது, “ஒரு டிக்கெட்டிற்கு பேருந்துகளில் 2500 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வாங்குகிறார்கள். அப்படி இருந்தும், மகாராஷ்ட்ரா எல்லையில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, ஜீப்புகளில் மாற்றிவிடுவார்கள். பயணிகளை அடைத்துக்கொண்டு செல்லும் இந்த ஜீப்புகளை, எல்லையில் நிற்கும் காவல்துறையினர் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்