Aran Sei

இந்திய வம்சாவளியினரின் உணவு உபசரிப்பு: இது ஒன்றே போதுமானது – மியா காலிஃபா நெகிழ்ச்சி

credits : bbc

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே,  கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி,  உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியைக் குறிப்பிட்டு “இது (விவசாயிகள் போராட்டம்) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.

ரிஹான்னாவைத் தொடர்ந்து சர்வேதச பிரபலமான மியா காலிஃபா, தன் ட்விட்டர் பக்கத்தில், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மியா, போராடும் விவசாயிகள் பணம் வாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்களா? அப்படியென்றால், நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளார் என்று கூறியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு

மேலும், விருதுகள் வழங்கும்போது இந்த நடிகர்கள் புறக்கணிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிண்டல் செய்துள்ள அவர், ”நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

விவசாயிகளுக்கு ஆதரவாக மியா காலிஃபா குரல் கொடுத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாகக் கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரான ரூபி கவுரும், கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜக்மீத் சிங்கும் இந்தியாவின் பாராம்பரிய உணவை மியா காலிஃபாவுக்கு அனுப்பியுள்ளனர். இந்த உபசரிப்பால் நெகிழ்ந்த மியா காலிஃபா இந்த உபசரிப்பு ஒன்றே போதுமானது என்றும் இதுவே தன்னை முன் நகர்த்தி செல்லப் போதுமானது என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: 10 லட்சத்திற்கும் அதிகாமானோர் மனு – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம்

இது தொடர்பாக மியா காலிஃபா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் “கடினமாக உழைத்து உண்மையில் ஒரு விஷயத்தைப் பெறுவது அற்புதமாக இருக்கிறது, இன்றைய தினம், இந்த அற்புதமான, சுவையான இரவு உணவை நான் சம்பாதித்ததைப் போல” என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த பிரச்சாரத்திற்காக எனக்கு இந்த இரவு உணவை அனுப்பிய ரூபிக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் அற்புதமான இனிப்பை வழங்கிய ஜக்மீத்துக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

”எல்லாவற்றிருக்கும் ஒரு விலை இருக்கிறது, என்னுடைய விலை சமோசா தான். என்னைச் சமோசாவின் மூலம் விலைக்கு வாங்கிவிடலாம்”  என இந்திய உணவின் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், சிறந்த சமோசா தருபவர்களுக்காகக் குரல் கொடுப்பேன் எனக் கிண்டல் செய்யும் தொனியில் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நாள் ஒன்றுக்கு ஒரு குலாப் ஜாமூன் உண்டால் பாசிசத்தை விரட்டிலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி; விவசாயிகள் போராட்டத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஆதரவு

ரிஹான்னாவைத் தொடர்ந்து கிரேடா துன்பெர்க், வனேசா நகாடே, ஜேமி மார்கன், லிசிப்பிரியா கங்குஜம், அமெண்டா கெர்னி, மீனா ஹாரிஸ், ஜமீலா ஜமீல், சுசன் சரண்டான் ஆகியோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்