மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நேற்றைய தினம் உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியை குறிப்பிட்டுள்ள ரிஹான்னா “இது (விவசாயிகள் போராட்டம் ) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரிஹான்னாவைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை செயற்பாட்டாளர்களான கிரேடா துன்பெர்க், வனேசா நகாடே, ஜேமி மார்கன், லிசிப்பிரியா கங்குஜம் ஆகியோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
இந்நிலையில், சர்வேதச பிரபலமான மியா காலிஃபா, விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மியா, போராடும் விவசாயிகள் பணம் வாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்களா? அப்படியென்றால், நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு
மேலும், விருதுகள் வழங்கும் போது இந்த நடிகர்கள் புறக்கணிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிண்டல் செய்துள்ள அவர், ”நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.