Aran Sei

சிஏஏ சட்டத்தின் விதிகளை வகுக்க 2022 ஜனவரி வரை கால அவகாசம் : மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம்  வேண்டும் என்று  ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

இன்று (ஜூலை 27), மக்களவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கௌரவ் கோகோவின்,  குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை வகுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற  கேள்விக்கு, “இச்சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விதிகளை வகுக்க காலக்கெடுவை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை நீட்டிக்க மக்களவை, மாநிலங்களவையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.” என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்தராய் பதில் அளித்துள்ளார்.

‘இந்தியாவில் பல்லாண்டுகள் இருப்பவர்களுக்கு வாழ உரிமையில்லையா?; சந்தேகம் வேண்டாம் சிஏஏ கேரளாவில் வராது’ – பினராயி விஜயன்

2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால், அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க வேண்டும் அல்லது அவகாசம் பெற வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்