Aran Sei

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் : பட்ஜெட்டில் நிதி குறைப்பு, ஊதிய பாக்கி 3,360 கோடி உயர்வு : ஒன்றிய அரசு தகவல்

காத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்தாண்டு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், கடந்தாண்டை விட 25.51% குறைக்கப்பட்டதுடன், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தில் 3,360 கோடி நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயின் போது வழங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்கள் குறித்த மாநில வாரியான விவரங்கள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். அக்கேள்விக்குப் பதிலளித்த கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தில் 3,360 கோடி நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஒன்றிய அரசு 73,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 98,000 கோடியுடன் ஒப்பிடுகையில் 25.51% குறைவாகும்.

மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு 752 கோடி ரூபாயும், உத்தரபிரதேச தொழிலாளர்களுக்கு 597 கோடியும், ராஜஸ்தான் தொழிலாளர்களுக்கு 555 கோடி ரூபாயும் ஊதிய பாக்கி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்