Aran Sei

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்றுப்பாலினத்தவர்களை பாலினம் மாற்ற முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தன்பாலின இணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்: அலட்சியமாய் செய்ல்படும் சமூகநலத்துறை – எதிகட்சிகள் குற்றச்சாட்டு

மதுரையைச் சேர்ந்த தன்பாலின இணையர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சென்னையில் வசித்து வந்ததாகவும், இந்நிலையில், அவர்களது பெற்றோர்கள் அவ்விரு நபர்களையும் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்ததாகவும் லைவ் லா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாகவும்,  இதனைதொடர்ந்து பாதுகாப்பு வேண்டி அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.வெங்கடேஷ் வழங்கியுள்ள அந்த உத்தரவில், “கன்வெர்ஷன் தெரப்பி என்று கூறப்படும் பாலினத்தை மாற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கும், மத சடங்கு முறைகளுக்கும் தடை விதித்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, கன்வெர்ஷன் தெரப்பியில் ஈடுபடும் எந்த ஒரு மருத்துவ பணியாளர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று லைவ் லா செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலில், மாற்றுபாலின சமூகத்தினர் மற்றும் பாலின உறுதிசெய்யப்படாதவர்களின் பிரச்சினைகள்குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ள பெற்றோர்கள் ஆசிரியர்கள் கூட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமெனவும் . பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலின சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கல் சேரும் வகையில் கொள்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

அதுமட்டுமின்றி, “மாற்றுபாலினத்தவர்களுக்கான நடுநிலை ஓய்வறைகள் கிடைப்பதையும், திருநங்கைகளுக்கான கல்வி பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கான விருப்பம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்; விண்ணப்ப படிவங்கள், போட்டி நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் ஆண் மற்றும் பெண் உள்ளதைப் போன்று கூடுதலாக ‘மாற்றுப்பாலினத்தவர்கள்” என்றும் சேர்க்கப்பட வேண்டும். மாற்றுபாலினத்தவர்களை உள்ளடக்கிய ஆலோசகர்களை நியமித்தல், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை, சிறை அதிகாரிகளுக்கான உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாகவும் லைவ் லா செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்