Aran Sei

உக்ரைன் – ரஷ்யா போர்: ரஷ்யர்களால் ஹேக் செய்யப்பட்ட உக்ரைன் ராணுவ அதிகாரிகளின் ஃபேஸ்புக்

பேஸ்புக் சமூக வலைதளத்தின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், “உக்ரைனில் ரஷ்யா போர் புரியத் தொடங்கி இருக்கும் இச்சூழலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த முக்கிய இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து ஒரு ஹேக்கிங் குழு ஃபேஸ்புக்கை பயன்படுத்தியது” என்று தெரிவித்துள்ளது.

உக்ரைனை மக்களை குறிவைத்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செயல்பட்டு வந்த ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து சுமார் 40 போலி கணக்குகள், குழுக்கள் மற்றும் பக்கங்களை கடந்த 48 மணி நேரத்தில் முடக்கியுள்ளதாக மெட்டா கூறியுள்ளது.

சொந்த மக்களை நாம் கைவிட முடியாது: உக்ரைன் ராணுவத்தால் தாக்கப்படும் இந்திய மாணவர்கள் குறித்து ராகுல் காந்தி கருத்து

“இந்த ஹேக்கிங் முயற்சிகளுக்கு கோஸ்ட் ரைட்டர் என அழைக்கப்படும் ஒரு குழுதான் காரணம். இக்குழுவானது விதிமுறைக்கு புறம்பாக சமூக ஊடக கணக்குகளைக் கைப்பற்றி இயக்கியது. உக்ரைன் நாட்டு படைகள் வலுவிழந்ததாக சித்தரிக்கும் காணொளிகளை, தாங்கள் கைப்பற்றிய கணக்குகளின் வழியாக  ஹேக்கர்கள் வெளியிட முயன்றனர். உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் காட்டில் இருந்து வெளியே வந்து சரணடைவதற்காக வெள்ளைக் கொடியை பறக்கவிடுவதாகக் காட்டும் காணொளியும் அவற்றுள் ஒன்று” என்று மெட்டா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விதிகளை மீறியதற்காக பத்திற்கும் மேற்பட்ட கணக்குகளையும் ஏராளமான சுட்டிகளையும் நீக்கியுள்ளோம். முதற்கட்ட விசாரணையின்படி அக்கணக்குகள் ரஷ்யாவைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. அக்கணக்குகள், உக்ரைன் – ரஷ்யா மோதல் குறித்துள்ள பொது உரையாடலை சீர்குலைக்க முயன்றன” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: NDTV

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்