Aran Sei

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் – முதன்மை பொருளாதார ஆலோசகர் பரிந்துரை

ன்றிய அரசின் ரயில்வே அமைக்கத்தின் கீழ் செயல்பட்டும் பொது துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கலாம் அல்லது மூடலாம் என முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்வால் தெரிவித்துள்ளார்.

ரியில் விகாஸ் நிகாம் லிமிடெட், (ஆர்விஎன்எல்), பிராத்வைட் அண்ட் கோ லிமிடெட் (பிசிஎல்), செண்டர் ஃபார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் (சிஆர்ஐஎஸ்), ரயில்டெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களான ரயில்வேஸ் ப்ரோடக்‌ஷன் யூனிட்ஸ், சென்டரல் ஆர்கனைசேஷன் ஃபார் ரயில்வே எலட்ரிபிகேஷன் (சிஒஆர்இ), சென்டரல் ஆர்கனைசேஷன் ஃபார் மாடர்னைஷேசன் ஆஃப் ஒர்க்‌ஷாப்ஸ் மற்றும் பல இந்த பட்டியலில் அடங்கும்.

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்‌ஷன் லிமிடெட் (ஐஆர்கான்) நிறுவனத்துடன், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்துடனும், பிசிஎல் நிறுவனத்தை ஆர்ஐடிஇஎஸ் நிறுவனத்துடனும், ரயில்டெலை ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் இணைக்கலாம் என சன்சால் கூறியுள்ளார்.

ரயில் பெட்டிகள் தயாரிக்கும் மூன்று தொழிற்சாலைகள், ரயில் இஞ்சின் தயாரிக்கும் மூன்று தொழிற்சாலைகள் மற்றும்  ரயில் சக்கரம் தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் என மொத்தம் 8 ட தொழிற்சாலைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தை உருவக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Source : PSU Watch

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்