பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததுபோல எல்பிஜி சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான சுல்தான்பூரில் மேனகா காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று(நவம்பர் 6), நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எல்பிஜி சிலிண்டர் போன்ற பிற பொருட்களின் விலையையும் குறைக்க ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
அண்மையில், ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் குறைத்தது. அதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வாட் வரியைக் குறைத்துள்ளன.
பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்
இந்த விலை குறைப்பின் பயன் மக்களுக்கு கிடைக்க, தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களின் செயலை தடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.