Aran Sei

வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தலில் பயன்படுத்தப்பட்டதில்லையென தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் சரிபார்ப்பு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை இல்லையெனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரமணி பிரதான சாலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் எடுத்துச் செல்வதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் இருந்த இயந்திரங்கள், ரூ 1.12 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு விசாரணைக்காக அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

இது தொடர்பாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : Times of India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்