Aran Sei

12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் – அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவைத் தலைவர் நடவடிக்கை

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  12 பேர் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என ஒன்றியஅரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் – வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தநிலையில், முன்னதாக நடந்த மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

மக்களவை உறுப்பினர்களான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோலா டென் உள்ளிட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து இன்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இந்துத்துவாவினரால் மிரட்டப்படும் கிறிஸ்துவ பாதிரியார்கள் – ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என காவல்துறை அறிவுரை

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பேரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், கடும் அமளியில் ஈடுபட்டதாலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாலும், 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்