Aran Sei

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு – பட்டியல், பழங்குடிகள் அமைப்பு டெல்லியில் போராட்டம்

ன்றிய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் பகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடியின அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பொதுத்துறை  சொத்துகளை மதிப்புகளை வெளிக்கொணரும் வகையில், 6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளைத் தனியாருக்கு  விற்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்திருந்தார்.

‘பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சண்டையிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்’ – உமர் அப்துல்லா

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் மற்றும் சமுகசெயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய பட்டியல் மற்றும் பழங்குடிகள் அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பின் தலைவர் உதித் ராஜ் தலைமையில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த உதித் ராஜ், 80 விழுக்காடு அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. மோடி அரசு இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக அரசு வேலைகளைப் பறிக்கிறது. பல்வேறு தீர்ப்பாயங்களில் 240க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில், ஒன்றில் கூட  பட்டியலினம்/ பழங்குடியினம்/பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த துணைவேந்தர் இல்லை” என்றும் கூறியுள்ளார்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் சோனு சூட் – கொரோனா நிதியை மறைத்ததாக வருமானவரித்துறை தகவல்

மேலும், தனியார்மயமாக்கலின் விளைவாக  பட்டியலினம்/ பழங்குடியினம்/பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், கடந்த 2௦௦2 ஆம் ஆண்டிலிருந்து தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதாகவும், தனியார்துறையில் இடஓதுக்கீடு கோரிவருவதாகவும்   தெரிவித்துள்ளார்.

Source:THE INDIAN EXPRESS

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்