Aran Sei

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

credits : reuters

ம்மு காஷ்மீர் மக்களின் விருப்பமின்றி, பறிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ-வை மத்திய அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதை மீட்க இந்திய அரசிடம் கேட்காமல், பாகிஸ்தானிடமோ அல்லது வேறு நாட்டிடமோவா கேட்கமுடியும் என்று ஒன்றுப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 12), ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அவர், “370 வது பிரிவானது இந்திய அரசியலமைப்பால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அல்லது சீனாவின் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மற்றும் பிடிபியின் விருப்பமின்றி, பறிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ-வை மத்திய அரசிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

‘ஒரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது, நாட்டிற்கு அச்சுறுத்தலாம்; காஷ்மீரின் இயல்பு நிலை இதுதான்’ : மெஹபூபா முப்தி

“இதை மீட்கக்கோரி பாகிஸ்தானிடமோ அல்லது வேறு நாட்டிடமோவா கேட்கமுடியுமா? எங்கள் அடையாளத்தையும் எங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் பறித்தபிறகு, நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இத்தனைக்கு பிறகும் நாம் எப்படி எதிர்த்தெழாது இருக்க முடியும்? இத்தனை பெரிய காயத்தை மத்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது. நம் குரல்வலையில் அடைந்துக்கிடக்கும் பெரும் வலிக்கு, ஒரு குரல் கொடுத்து அழக்கூட நமக்கு உரிமை இல்லையா?” என்று மெஹபூபா முப்தி  கேள்வி எழுப்பியுள்ளார்.

மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட சம்மதித்தோம் – மெஹபூபா முஃப்தி கருத்து

மேலும், “இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்திருக்க, சில நிபந்தனைகளுக்கு  உடன்பட்டே சம்மதித்தது. ஆனால், 370 வது பிரிவைப் பறித்ததன் வழியாக மத்திய அரசு அந்த நிபந்தனைகளை மீறியுள்ளது.  ஜம்மு காஷ்மீரின் மக்கள்தான், இந்தியாவின் கைகளை இன்னமும் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்