Aran Sei

‘காஷ்மீரின் கௌரவத்தை மீட்பதற்கான உரமிக்க போராட்டத்திற்கு தயாராகுங்கள்’ – மெஹபூபா முப்தி

credits : reuters

ரசியலமைப்பின் வழியே ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தையும் சிறப்பு அந்தஸ்தையும் மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கோரிக்கை வைத்துள்ளார்.

நேற்று (மார்ச் 28), காஷ்மீரில் உள்ள புத்கம் மாவட்டத்தில் நடந்த அக்கட்சியின் ஒரு நாள் மாநாட்டில் பேசிய மெஹபூபா முப்தி, “நம்முடைய போராட்டம் நீளமானதும் கடினமானதுமாக இருக்கும். நாம் பயணம் செய்யும் இப்பாதை சவால்கள் நிறைந்தது. இது மனவலிமை அற்றவர்களுக்கான பாதையல்ல. இப்போராட்டத்தை என்னால் தனியாக முன்னெடுத்து செல்ல முடியாது. நம் மக்களின் ஆதரவு வேண்டும்.” என்று  கோரியுள்ளார்.

மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட சம்மதித்தோம் – மெஹபூபா முஃப்தி கருத்து

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுகையில், “நம்மிடம் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்டதை மீட்டெடுக்க எனக்கு உங்களின் உறுதிமிக்க ஆதரவு தேவை. ஜம்மு-காஷ்மீரின் மக்களே.. நீங்கள் எழுந்து நில்லுங்கள். நம் நிலத்தின் மரியாதையும் கௌரவத்தை மீட்டெடுப்பதற்கான உரமிக்கதொரு போராட்டத்திற்கு தயாராகுங்கள்.” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், “என்னையும் என்னுடைய கட்சியையும் அழித்தொழிக்க மத்திய அரசு எல்லா வழிகளிலும் முயன்று வருகிறது. ஆனால், நாங்கள் மறைக்கவோ வேதனைப்படவோ எதுவும் இல்லை என்பதால் நாங்கள் எப்போதும் அவர்களை விட உயர்ந்து நிற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்