Aran Sei

காஷ்மீரில் நடைபெறும் வன்முறைக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

Credit: NDTV

காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பண்டிட் சமூகத்தினரை தீவிரவாதிகள் குறிவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (மே 12) காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான ராகுல் பட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் பண்டிட்கள் குறித்து படம் எடுத்தால் மட்டும் போதாது; பாதுகாப்பும் வேண்டும் – காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை காஷ்மீர் நிர்வாகம் அமைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மெகபூபா முஃப்தி, “எனது ஆட்சிகாலத்தில் காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்திருந்த 2016 ஆண்டு காலக்கட்டத்தில் கூட, ஒரு காஷ்மீர் பண்டிட் கூட உயிரிழக்கவில்லை. இவ்வாறு அமைதி பூங்காவாக இருந்த காஷ்மீரில் வன்முறை ஏற்படுவதற்கு என்ன காரணம்?. ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் தான். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன்,  வன்முறையையும் தூண்டிவிட்டுள்ளது. தற்போது நடைபெறும் வன்முறைகளுக்கு அந்த திரைப்படத்தை தான் பொறுப்பேற்க செய்ய வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்