Aran Sei

காஷ்மீர் மக்களின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசு – வீட்டுக் காவலில் உள்ளதாக குற்றச்சாட்டு

ம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருப்பதை மறுக்கும் வகையில், “நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்” என முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

”ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகள் குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் இந்திய ஒன்றிய அரசு, காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் உரிமையை வழங்க மறுக்கிறது. ஜம்மு காஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக நிர்வாகம் கருதுவதால், நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இதன்மூலம் நிலைமை இயல்பாக இருப்பதாக நிர்வாகம் கூறுவது பொய் என நிருபணம் ஆகியுள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

ஹூரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி உயிரிழந்ததை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு கட்டுபாடுகளை நிர்வாகம் விதித்திருக்கும் நிலையில், மெகபூபா முப்தி இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்