Aran Sei

ஜம்மு காஷ்மீர் மக்களின் பொறுமையைச் சோதிக்காதீர் – ஒன்றிய அரசுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

credits : reuters

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 21), தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மெஹபூபா முப்தி கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசியவர், “பொறுமைக்கு ஒரு துணிவு தேவை. ஜம்மு-காஷ்மீர் மக்கள் அப்பொறுமையை இழக்கும் நாளில், நீங்களும் இருக்க மாட்டீர்கள். நீங்கள் மறைந்து போவீர்கள். நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். புரிந்துகொண்டு உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும். அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய சக்தியான  அமெரிக்கா, தங்கள் படுக்கைகளைச் சுறுட்டிக்கொண்டு திரும்ப வேண்டியிருந்தது. உங்களுக்கு (ஒன்றிய அரசிற்கு) இன்னும் வாய்ப்பு உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்ஜி, வெளியிலும் (பாகிஸ்தான்) உள்ளேயும் (ஜம்மு காஷ்மீர்) பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். நீங்களும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததையும் குறிப்பிட்டு பேசியுள்ள மெஹபூபா முப்தி, “நீங்கள் சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் செயல்பட்டு எங்களைக் கொள்ளையடித்தீர்கள். ஜம்மு காஷ்மீரின் அடையாளத்தை நீங்கள் சிதைத்துவிட்டீர்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: Indian Express

தொடர்புடைய பதிவுகள்:

‘புதிய காஷ்மீரில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆயுதமேந்துகிறது’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

‘உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: காஷ்மீரை சிறையாக்கியதோடு குழந்தைகளையும் அரசு குறிவைக்கிறதென மெஹபூபா முப்தி கண்டனம்

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்