Aran Sei

‘ஒரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது, நாட்டிற்கு அச்சுறுத்தலாம்; காஷ்மீரின் இயல்பு நிலை இதுதான்’ : மெஹபூபா முப்தி

ரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பது, வலிமைமிக்க ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாம் என்றும் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, காஷ்மீரின் இயல்பு நிலை இப்படிதான் இருக்கிறது என்றும் ஒன்றுபட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மெஹபூபா முப்தி, “எனக்கு பாஸ்போர்ட் அளிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எற்படுத்தும் என்ற சிஐடியின் அறிக்கையின் அடிப்படையில் என்னுடைய பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட சம்மதித்தோம் – மெஹபூபா முஃப்தி கருத்து

“ஒரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது, வலிமைமிக்க ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாம். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, காஷ்மீரின் இயல்பு நிலை இப்படிதான் இருக்கிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “என்னுடைய தாயின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்துள்ளது. என்னுடைய எழுபது வயது தாய் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக  சிஐடி கூறியதால், அவருக்கு பாஸ்போர்ட் தர மறுத்து விட்டனர். இந்திய அரசிற்கு நான் அடிபணியவில்லை என்பதால், என்னைத் துன்புறுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் மிகவும் அபத்தமான முறைகளை அது கையாள்கிறது.” என்று மெஹபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்