Aran Sei

ஜம்மு காஷ்மீர் : மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெஹ்பூபா முப்தி

Image Credits: BBC

ம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, தன்னை ஸ்ரீநகர் இல்லத்தை விட்டுக் காவலர்கள் வெளியேறவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். புட்காம் மாவட்டத்தில் உள்ள வன நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை அவர் சந்திக்க விரும்பியதாகவும், அதைத் தடுப்பதற்காகக் காவலர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் மெஹ்பூபா முப்தி கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மெஹ்பூபா முப்தி காவலர்கள் தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தியின் இந்தக் கருத்துக்குக் காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

“எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வாயை மூட இந்திய அரசு சட்டவிரோதத் தடுப்புக் காவலைப் பயன்படுத்துகின்றது. இது இந்திய அரசுக்கு மிகவும் விருப்பமான ஒரு முறையாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட முகாமிற்குச் செல்ல விரும்பியதால் நான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்” என்று மெஹ்பூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.

“இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்த முயற்சிக்கிறது. அவர்களுக்கு அநீதியை இழைக்கிறது. ஆனால் அவர்கள் இதற்கு எதிராகக் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் அரசு நினைக்கிறது” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்