மாற்றுக்கருத்துகளை முற்றாக நசுக்கி, காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றியதில் திருப்தி அடையாத இந்த ஆட்சி, இப்போது காஷ்மீரின் குழந்தைகளையும் குறிவைக்கிறது என்று ஒன்றுப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி, காஷ்மீர் மாநிலம் குப்வரா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 4 பேரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இறுதி சடங்கின்போது, தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 6), தனது ட்விட்டர் பக்கத்தில் மெஹபூபா முப்தி, “15 வயது சிறுவன்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிந்துள்ளது, நிறுவனமயமாக்கப்பட்ட கொடுங்கோன்மையான சர்வாதிகாரத்திற்கு மற்றொரு சான்றாகும். மாற்றுக்கருத்துகளை முற்றாக நசுக்கி, காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றியதில் திருப்தி அடையாத இந்த ஆட்சி, இப்போது குழந்தைகளையும் குறிவைக்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
Booking a 15 year old under UAPA is yet another example of institutionalised tyranny. Not being satisfied with converting Kashmir into an open air prison where dissent is crushed this regime is now going after children.Does anyone in the country care?https://t.co/fcNSL63PB6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 6, 2021
மேலும், நாட்டில் யாராவது இதை கவனிக்கிறீர்களா என்று ஒன்றுப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்திகேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.