Aran Sei

கோகோ கோலா ஆலைகளால் ஏற்படும் பாதிப்பு – ஆய்வுக்குழு அமைக்க மேகாலயா அரசு முடிவு

மேகாலாயவில் கோகோ கோலா ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாசு ஏற்படுத்தும் கோக் ஆலைகளை (அவற்றில் பல சட்டவிரோதமானவை) எதிர்த்துக் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்ங்கா பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பொது சுகாதார பிரச்னைகள், வனத்துறை அனுமதி மற்றும் மாசு சுமை ஆகியவற்றுடன் சேர்த்து சுற்றுசூழல் பாதிப்புகள்குறித்து குழு பரிந்துரைக்கும் என மேகாலயாவின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பி.கே. சங்மா தெரிவித்துள்ளார்.

மேகாலயா சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், ”ஒன்றைச்சாளர முறையில், கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் பகுதியில் 48 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நிறுவுவதற்கு ஒப்புதல் மற்றும் இயக்குதலுக்கு ஒப்புதல் என்ற அடிப்படையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது” என கூறியுள்ளார்.

”மேகாலயா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 13 ஆலைகளுக்கு நிறுவுவதற்கான ஒப்புதல் மற்றும் 9 ஆலைகளுக்கு இயங்குவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிறுவுவதற்கான ஒப்புதல் இல்லாத 30 ஆலைகளை (உரிய சட்டங்களின் கீழ்) மூட நோட்டீஸ் வழங்கியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு பின்னர் 24 ஆலைகள் மூடப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஆலை மூடப்பட்ட அறிவிப்பை மீறி, தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. விதியை மீறிச் செயல்படும் ஆலைகள்மீது வழக்கு பதியப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல்படும் ஆலைகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மேகாலயா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சுட்ங்கா பகுதியின் உள்ளூர் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்