Aran Sei

‘விவசாயிகள் போராட்டம் குறித்து நான் பேசினால் டெல்லியிலிருந்து அழைப்பு வரும்’ – மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

நான் விவசாயிகள் பிரச்சனையை பற்றி  பேசினால், டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வருமா என்று இரண்டு வாரங்கள் காத்துக்கொண்டிருக்க நேரிடும் என்று மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

நேற்று(நவம்பர் 7), நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள சத்ய பால் மாலிக், “இன்றைய பிரச்சினை விவசாயிகளின் பிரச்சினை. அதுபற்றி நான் ஏதாவது பேசினால் சர்ச்சை வரும். அப்படி நான் விவசாயிகள் பிரச்சனையை பற்றி  பேசினால், டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வருமா என்று இரண்டு வாரங்கள் காத்துக்கொண்டிருக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

‘சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாத அவலம்’- சரிசெய்ய ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

“ஒரு ஆளுநரை நீக்கிவிட முடியாது. ஆனால் என்னுடைய நலம் விரும்பிகள் (விமர்சகர்களை இவ்வாறு சொல்கிறார்) நான் ஏதாவது பேசுவேன். அதற்கு நான் நீக்கப்படும் தருணத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் பேஸ்புக்கில் வந்து, ‘கவர்னர் சாப், நீங்கள் இப்பணியை கடினமாக உணர்ந்தால், நீங்கள் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது?’ என கேட்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“டெல்லியில் உள்ள இரண்டு மூன்று பெரிய நபர்களால் தான் ஆளுநராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அவர்களின் விருப்பத்திற்கு மாறாகதான் நான் பேசி வருகிறேன். நான் பேசுவது அவர்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளும்படி அவர்கள் என்னிடம் கேட்கும் நாளில், நான் ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் என் ராஜினாமாவை வழங்கிவிடுவேன்” என்று சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.

‘அதிகாரப் பேச்சை தவிர்க்காவிட்டால் பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம்’ – தெலுங்கானா முதலமைச்சர்

அண்மையில், ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில பாஜக தலைவர் ஓ.பி. தங்கர் கலந்து கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக பேரணி சென்ற விவசாயிகள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர்.

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சத்ய பால் மாலிக், ”தடியடி நடத்தியதற்காக விவசாயிகளிடம் ஹரியானா முதலமைச்சர் மனோஜ் லால் கட்டார் மன்னிப்பு கேட்க வேண்டும். ஹரியானா முதல்வர் விவசாயிகள்மீது லத்தியை பயன்படுத்துகிறார். ஒன்றிய அரசு கூட வன்முறையைப் பயன்படுத்தவில்லை… வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என நான் உயர்மட்ட தலைமைக்கு  கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு அரசு எந்த ஆறுதலையும் வழங்கவில்லை என்ற உண்மை, ஏமாற்ற அளிப்பதாக கூறியிருந்த மாலிக், “விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்… ஆனால், அரசாங்கத்தில் இருந்து யாரும் ஆறுதல் வார்த்தை கூட பேசவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்