Aran Sei

மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை மசோதா – எதிர்த்து சட்டம் இயற்ற கோரும் மாநில காங்கிரஸ்

மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021ஐ எதிர்த்து ஒரு புதிய மசோதாவை மேகாலயா அரசு கொண்டு வர வேண்டும் என மேகாலயா மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் கிறுஸ்தவர்களின் உணவில் மாட்டிறைச்சி ஒரு பகுதியாக இருக்கிறது.

பெகசிஸ் விவகாரம்: ‘இந்தியாவில் அம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும்’ – பாஜக அசாம் முதலமைச்சர்

மாநிலத்தின் புவியியல் அமைப்பின்படி நாட்டின் பிற பகுதியில் இருந்து வரும் பொருட்கள் அசாம் வழியாகத் தான் வர வேண்டும்.

”எங்கள் மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பாதுக்காக்க எங்களுக்கென்று சொந்த சட்டம் இருக்க வேண்டும். இந்த நிகழ்வைப் பொறுத்த வரை மாட்டிறைச்சியை அணுக எங்களுக்கு உரிமை உண்டு. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்குறோம். ஆனால் இது (மாட்டிறைச்சி) எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகும். மேலும், எங்கள் உணவுப் பழக்கத்தைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது” என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீன் லிங்கடோ  கூறியுள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட உலகத் தலைவர்கள் – 14 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் வெளியானது

மேகாலயாவின் துணை முதல்வர் பிரஸ்டன் டின்சோங்கிடம், அசாம் மசோதாவின் சில ‘ஆட்சேபத்திற்குரிய’ பிரிவுகளை சுட்டிக்காட்டி, ஹைனிவ்ட்ரெப் இளைஞர் அமைப்பு மனு ஒன்றை அளித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவனையின்படி மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் வணிகம் ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளது. அதன்படி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தைத் தவிர மாநிலங்களுக்கு இடையிலான வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை” என கவுன்சிலின் தலைவர் ராபர்ட்ஜூன் கார்ஜஹ்ரின் கூறினார்.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

“கால்நடை போக்குவர்த்தை கட்டுப்படுத்த அசாம் அனுமதிக்கப்பட்டால், அது மேகாலயா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் உணவு மற்றும் பொருட்கள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அல்லது தடை செய்ய ஊக்குவிக்கும்” என அவர் கூறினார்.

கால்நடைகளின் போக்குவரத்தை தடை செய்வதோடு,  மாட்டிறைச்சியை உண்ணாத சமூகங்களின் வழிபாட்டுத்தலங்களின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்ய இந்த மசோதா முயற்சிக்கிறது.

 

செய்தி: தி இந்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்