Aran Sei

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

டந்த ஜனவரி 12-ம் தேதி, ஹரியானா காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த தலித் தொழிலாளரும் தொழிற்சங்கவாதியுமான நவ்தீப் கவுர், டெல்லி – ஹரியானா எல்லையில் இருக்கும் சோனிபட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தார். ஹரியானா மாநிலம் குந்த்லி பகுதியில், நடந்த சம்பள உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் காவல்துறையால கைது செய்யப்பட்டார்.

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

காவல்துறை நவ்தீப் கவுர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, கலகம், சட்டவிரோதமாக கூட்டம் கூடியது, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடந்த ஒரு மாதமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்திய பிரபலங்களின் ”ஒரே மாதிரியான”  ட்விட் : பாஜகவின் அழுத்தமா? – மகாராஷ்ட்ரா அரசு விசாரிக்க முடிவு

கடந்த சனிக்கிழமையன்று, அமேரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினரான மீனா ஹாரிஸ் விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கு எதிராக அவரின் உருவ படத்தை ஐக்கிய இந்து முன்னணி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்முடைய புகைபடத்தை ஒரு பயங்கரவாத கும்பல் எரிப்பதை பார்க்கும்போது விசித்திரமாக இருக்கிறது. நாம் தற்போது இந்தியாவில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.” என்று கூறியிருந்தார்.

மேலும், “காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்க்கும் 23 வயது தொழிலாளர் உரிமை ஆர்வலரான நவ்தீப் கவுர் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“இது விவசாயக் கொள்கையைப் பற்றியது மட்டுமல்ல. இது மத சிறுபான்மையினரின் குரலை ஒடுக்குவது பற்றியது. இது காவல்துறையின் வன்முறை, வறட்டு தேசியவாதம், தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றியது. இது உலகளாவிய சர்வாதிகாரம் பற்றியது. எங்கள் (உள்நாட்டு) விவகாரங்களில் இருந்து விலகி இருங்கள் என சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் எங்கள் பிரச்சினைகள்” என கூறி ”நவ்தீப் கவுரை விடுதை செய்” என ட்விட் செய்திருந்தார்.

ட்விட்டரில் பாகிஸ்தான் சதி : 1,178 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

மீனா ஹாரிசின் ட்வீட்டை தொடர்ந்து இந்த பிரச்சனை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அவருடைய கருத்தை ஆமோதித்துள்ள நவ்தீப் கவுரின் அக்கா “விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையை கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது, அதனால்தான் எனது தங்கை குறிவைக்கப்பட்டார்” என்றும் “அவர் காவல் நிலையத்தில் ஆண் காவலர்களால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது  அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் உள்ளன. இதற்கு கடுமையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும்,” என்று  அவர் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களின் அனைத்து குற்றச்சாட்டையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்து அமைப்பினர் போராட்டம்: என்னை அமைதியாக்க முடியாது – மீனா ஹாரீஸ் மீண்டும் ட்விட்டரில் பதிவு

நவ்தீப் கவுரின் குடும்பமே சமூக செயற்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பெற்றோர்கள், பஞ்சாபில் உள்ள விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள், அக்கா டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவ செயற்பாட்டாளர், நவ்தீப் கவுர் தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்வதற்காக பணியாற்றிய ஒரு தொழிற்சங்கமான “மஜ்தூர் அதிகார் சங்கதன்” உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்