Aran Sei

பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காக பேராடியவருக்கு 5 ஆண்டு சிறை – சவுதி நீதிமன்றம் உத்தரவு

செயற்பாட்டாளர் லூஜெயின் அல்-ஹத்லூலுக்கு, சவுதி நீதிமன்றம் ஐந்து ஆண்டு மற்றும் எட்டு மாதங்கள் சிறை தன்டனை விதித்துள்ளது.

சவுதியின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக லூஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மே மாதம், சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன், லூஜெயின் மற்றும் சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என நீன்ட காலமாக போராடி வந்தவர்களில் லூஜெயினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் தேசபக்தி பெயரால் பெண்கள் உரிமை மறுப்பு – போலந்தில் பரவும் போராட்டம்

லூஜெயின் ஹல்துல், சவுதியின் விரோத நாடுகளை தொடர்பு கொண்டு, சவுதியை குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டதாக அமைச்சர் இளவரசர் ஃபெய்சல் பின் ஃபர்ஹான் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த சாட்சியங்களும் இல்லையென லூஜெயினின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களில் பலர் விடுதலை செய்யப்பட்ட பிறகும், லூஜெயின் உட்பட சிலர் கடுமையான குற்றச்சாட்டுகள் காரணமாக விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

சவுதி அரசுக்கு ஆதரவான பிரதான ஊடகங்கள், கைது செய்யப்பட்டவர்களை  ‘துரோகிகள்’ என்று சித்தரிப்பதா தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், லூஜெயின் சிறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவருடைய குடும்பம் வைக்கும் குற்றச்சாட்டுகளை, சவுதி அதிகாரிகள் மறுப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு, சவுதியில் பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது, மனித உரிமை மீறல் என சர்வதேச அளவில் பேசப்பட்டது. அதே ஆண்டில், ஊடகவியலாளர் ஜமால் கஷோசி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்