Aran Sei

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) எனும் உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட முன்னணி பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இதில் பலருடைய தொலைபேசிகள் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO Group) என்ற நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் ஸ்பைவேர், உளவு பார்ப்பதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இந்த ஸ்பைவேரை, ஸ்மார்ட் போன்களில் ஊடுருவச் செய்து, ஒரு தொலைபேசியை முற்றிலுமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். இந்த செயலியை பயன்படுத்தி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டும், வாட்ஸ் அப் நிறுவனம், என்.எஸ்.ஒ குரூப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட நபர்களின் தொலைபேசி எண்கள் பட்டியல் கசிந்துள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த முக்கியமான பத்திரிகையாளர்கள் 40 பேர் இடம்பெற்றிருப்பதாகவும், அதில் 10 பேரினுடைய தொலைபேசிகள் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி நடந்திருக்கலாம் என்பது தடவியல் சோதனையின் வழியாக நிரூபணம் ஆகியிருப்பதாக தி வயர் கூறுகிறது.

பெகாசிஸ் ஸ்பைவேர், தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ விற்பனை செய்யப்படுவதில்லை என்று என்.எஸ்.ஓ குரூப் நிறுவனம் உறுதியாக கூறியுள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பலரின் எண்கள் கசிந்திருப்பதால், இந்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்துகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள் செயலிழப்பு – பெரும் நிறுவனங்களே காரணமென பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

பெகாசஸ் ஸ்பைவேர் வழியாக கண்காணிக்கப்படுவோர் பட்டியலில், டெல்லியில் இருந்து செயல்படும் முக்கிய பத்திரிகையாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் நிகில் எனும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த ஒப்பந்தங்களை பற்றி செய்தி வெளியிட்ட தி வயர் இணையதளத்தைச் சேர்ந்த் ரோகிணி சிங், அந்த இணையதளத்தின் நிறுவனர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் எம்.கே.வேணு, தி வயர் இணையதளத்தைச் சேர்ந்த தேவிரூபா மித்ரா, பிரேம்குமார் ஜா மற்றும் ஸ்வாதி சதுர்வேதி, ரஃபேல் விமான ஊழல் பற்றி தொடர்ச்சியாக எழுதி வந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த் சுஷாந்த் சிங், கல்வி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செய்திகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திர்கையில் எழுதி வந்த ரித்திகா சோப்ரா, காஷ்மீர் தொடர்பான செய்திகளை எழுதி வந்த முசாமீல் ஜமீல் ஆகியோர் இடம் பெற்றிப்பதாக தி வயர் கூறியுள்ளது.

தேஜஸ்வி சூர்யாவை கேள்விகளால் திணறடித்த பத்திரிகையாளர்கள் – பாதியில் நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு

அவர்கள் மட்டுமின்றி, டெல்லியில் இருந்து பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவம் தொடர்பான செய்திகளை இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அளித்து வந்த சந்தீப் உன்னிதன், உள்துறை அமைச்சகம் தொடர்பான செய்திகளை தி இந்து நாளிதழுக்கு வழங்கி வந்த விஜய்தா சிங், டிவி18 நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் குப்தா, இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சிஷீர் குப்தா, பிரசாந்த் ஜா, ராகுல் சிங், அவுரங்கசீப் நஷ்க்பந்தி, தி பயோனீர் இணையதளத்தைச் சேர்ந்த ஜே.கோபிகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மரணமடையும் பத்திரிகையாளர்கள்: உலகளவில் இந்தியா மூன்றாம் இடம்

டெல்லிக்கு அப்பால், வடகிழக்கு மாநிலங்களில் பிரபலமான தி ஃபிராண்டியர் தொலைகாட்சியின் ஆசிரியர் மனோரஞ்சனா குப்தா, பீஹாரைச் சேர்ந்த சஞ்சய் ஷ்யாம் மற்றும் ஜஸ்பல் சிங் ஹேரன், பஞ்சாபிரோசனா பெஹ்ரதார்  நாளிதழின் ஆசிரியர் ஹெரன், ஜார்க்கண்டைச் சேர்ந்த ரூபேஷ் குமார் சிங் ஆகியோர் கண்காணிக்கப்படுவோரின் பட்டியலில் உள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை – அரசின் மிரட்டல் என்று பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

முன்னதாக முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றி தற்போது, பல செய்தி இணையதளங்களில் கட்டுரையாளர்களாக பணியாற்றி வரும் சாய்காத் தத்தா, பரன்ஜாய் குஹா தாகுர்தா, ஸ்மிதா ஷர்மா, எஸ்.என்.எம்.அபிதி, இஃப்திகார் கிலானி ஆகியோரின் எண்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் : காவலை நீட்டித்த நீதிமன்றம்

இந்தச் செயலியின் வழியாக கண்காணிக்கப்பட்டு வரும் பத்திரிகையாளர்கள் பலரும் இது போன்ற செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, என்.எஸ்.ஓ குரூப் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் (Forbidden Stories)  என்ற பத்திரிகைக்கும், ஆம்னஸ்டி இண்டர் நேஷனல் (Amnesty International) என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் கிடைத்துள்ளது. அந்த ஆவணங்களில் இருந்த 50 ஆயிரம் தொலைபேசி எண்கள் தி கார்டியன், தி வாஷிங்டன் போஸ்ட், தி வயர் உட்பட 16 சர்வதேச பத்திரிகைகளுக்கு பகிரப்பட்டுள்ளது. அந்த 16 பத்திரிகை நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடத்திய விசாரணையில் 10 நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நீதிபதிகள், எதிர்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலரும் பெகாசிஸ் ஸ்பைவேர் மூலம் வேவுபார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்