Aran Sei

ஓடிடி தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் – விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டம்

டிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 31), மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஓடிடி தளங்களில் வெளியான சில இணைய தொடர்கள் குறித்து நிறைய புகார்கள் வருகின்றன என்று கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆன்லைனுக்கு கட்டுப்பாடு – கருத்துரிமையை பறிக்கும் செயல் – இயக்குனர் விஜய்வரதராஜ்

“ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் தொடர்களும், இணைய வழியிலான செய்திதளங்களும்  ஊடக கவுன்சில் சட்டம், தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் தணிக்கை துறையின் கீழ் வராது. அதனால், இவற்றுக்கு விதக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், யூடியூப், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், ஒளிக்காட்சிகள், செய்தி இணையதளங்கள்  போன்றவைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

மேலும், அரசியலமைப்புச் சட்டம் 77 உள்ள 3ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகள், 1961-ஐ திருத்துவதன் மூலம், இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்