Aran Sei

ஹத்ராஸ் சம்பவம் பொய் – சத்திஸ்கர் பாஜக எம்பி

credit : thewire

த்ராஸில் 19 வயதுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம் பொய்” என்று சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

கான்கர் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் மாண்டவி சென்ற வாரம் சத்திஸ்கர் மாநிலம் தனோராவில் பழங்குடி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின் போது இந்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“ஹத்ராஸில் பொய்யான சம்பவங்களைப் பரப்பும் காங்கரஸ்காரர்கள் தனோராவில் சிபிஐ விசாரணை செய்தால் ஒவ்வொரு ஐந்து கிராமங்களிலும் இதைப் போன்ற பல தற்கொலைச் சம்பவங்களைத் தோண்டி எடுக்கலாம். ஹத்ராஸில் எந்த வன்கொடுமையும் நடக்கவில்லை” என்று பாஜக எம்.பி பேசியதாக தி வயர் வெளியிட்டுள்ளது.

“…பொய்யான செய்தியை நீங்களே உண்டாக்குங்கள், வன்கொடுமை என்று நீங்களே பரப்புங்கள், காங்கரஸ் மூத்த தலைவர்கள் எந்த வன்கொடுமையும் நடக்காத இடத்திற்குச் சென்றுள்ளனர்” என்று அவர் போராட்டத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

“அவர்கள் சொன்ன எல்லாம் சத்திஸ்கரில் வசிக்கும் பழங்குடியினருக்குத்தான் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

“ஏன் அவர்கள் இங்கே வரமறுக்கிறார்கள்? ஏன் அவர்கள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள்? சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நிலைமையைச் சமாளிக்க முடியாததால் பதவி விலக வேண்டும்” என்று பேசியுள்ளதாக தி வயர் வெளியிட்டுள்ளது.

“சில பத்திரிகைகள் ஹத்ராஸ் சம்பவம் பொய்யானது என்று எழுதியது ட்விட்டரில் வேகமாகப் பரவியுள்ளது. ஹத்ராஸ் சம்பவம் பொய்யானது. ஆனால் தனோரா சம்பவம் தான் உண்மையானது. எனவேதான் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்று செய்தியாளர்களைச் சந்தித்த பின் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் பொய்யான சம்பவத்திற்குப் போராட்டம் செய்கிறது. ஆனால் உண்மையான சம்பவத்திற்குப் போராட்டம் செய்யவில்லை” என்று பேசியுள்ளார்.

“நமக்கு யாரும் வாக்களிக்காத ஹத்ராஸ் இங்கிருந்து பல மைல்கள் தூரத்தில் உள்ளது. ஆனால், காங்கரஸ் தர்ணா போராட்டத்திற்குச் சென்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

“மாண்டவியின் இந்தக் கருத்து பாஜகவினரின் மனநிலையைப் பிரதிபளிக்கிறது” என்று காங்கரஸ் செய்தித் தொடர்பாளர் தனஞ்சய் சிங்க் தாகூர் தெரிவித்துள்ளதாக தி வயர் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

“மூத்த பாஜக தலைவர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களின் பிரச்சனையை மட்டும் தான் பேசுவார்கள் என்பது தெளிவாகிறது. அவரது பொய்யான இந்தக் கருத்தை எதிர்பாராதவிதமாக ஊடகத்தில் உறுதிபடச் சொல்லிவிட்டார்” என்று தனஞ்செய் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்