மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்தீப் புனியா என்ற சுயேச்சையான பத்திரிகையாளர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அவர் போராட்டக் களமான சிங்கு பகுதியில் சனிக்கிழமை இரவு போலீசால் கைது செய்யப்பட்டிருந்தார். மன்தீப் புனியாவும் தர்மேந்திர சிங் என்ற இன்னொரு பத்திரிகையாளரும் போலீசுடன் “தவறாக நடந்து” கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு தர்மேந்திர சிங் விடுவிக்கப்பட்டார், ஆனால், மன்தீப் புனியா நீதிபதி முன்பு கொண்டு செல்லப்பட்டார்.
ஜனவரி 26-ம் தேதி அன்று விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணி தொடர்பாக கருத்து சொன்னதற்காக பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் பிறர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. த வயர் செய்தித் தளத்தின் ஆசிரியர் சித்தார்த்த வரதராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை கண்டித்துள்ளார். “உண்மையைக் கண்டு அஞ்சுபவர்கள் உண்மையான பத்திரிகையாளர்களை கைது செய்கின்றனர்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
जो सच से डरते हैं, वे सच्चे पत्रकारों को गिरफ़्तार करते हैं। pic.twitter.com/JIGkUUji92
— Rahul Gandhi (@RahulGandhi) January 31, 2021
சசி தரூருக்கு எதிராகவும் பிற பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை வன்மையாக கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, பிரஸ் அசோசியேஷன் ஆகிய பத்திரிகையாளர்களின் சங்கங்கள், தனது கடமையைச் செய்யும் எந்த ஒரு பத்திரிகையாளரும் தொந்தரவு செய்யப்படக் கூடாது என்று கூறி, மன்தீப் புனியாவை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளது.
எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா என்ற ஊடக ஆசிரியர்களின் சங்கம் விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டனம் செய்துள்ளது.
#मनदीप_पुनिया_को_रिहा_करो
Journalists protesting against the arrest of Mandeep Punia next to the new Delhi police headquarters pic.twitter.com/1MiwNHAW2I— Rovinsan Kumar (@RovinsanK) February 1, 2021
மன்தீப் புனியா கைது செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு அருகில் நேற்று பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.