டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசால், அண்மையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பத்திரிகையாசிரிகள் சங்கம் (இஜிஐ) கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இக்கடிதம் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு
அச்சங்கம், மார்ச் 6 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், இந்திய அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு பாதகம் ஏற்படாத வண்ணம் ஆக்கபூர்வமான அணுகுமுறையில், இத்துறையை சேர்ந்த அனைத்து பங்குதாரர்களுடனும் நியாயமான ஆலோசனைகளை மத்திய அரசு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
“இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதில் உங்களுக்கு இருக்கும் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, இவ்விதிகளை ரத்து செய்யும் நடவடிக்கையில் நீங்கள் உடனடியாக இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மேலும், இவ்விதிகள் பங்குதாரர்களுடன் முறையான கலந்துரையாடல்கள் எதையும் மேற்கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மோசமான முறையில் சமரசம் செய்யப்படுவது கவலையளிக்கிறது என்றும் இந்திய பத்திரிகையாசிரிகள் சங்கம் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.